TNPSC Thervupettagam

வயோ சம்மான் ராஷ்ட்ரிய அபியான் பிரச்சாரம் 2026

November 8 , 2026 10 days 105 0
  • மூத்த குடிமக்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று வயோ சம்மான் ராஷ்ட்ரிய அபியான் என்ற பிரச்சாரத்தை தொடங்கியது.
  • தலைமுறைகளுக்கிடையே மரியாதை, தோழமை மற்றும் பகிரப்பட்ட பொறுப்பை மேம்படுத்துவதற்காக அடல் வயோ அப்யுதய் யோஜனா (AVYAY) திட்டத்தின் கீழ் இந்த பிரச்சாரம் செயல்படுத்தப்படுகிறது.
  • இது இணைத்தல் (Connect), உரையாடுதல் (Converse), இணைந்து உருவாக்குதல் (Co-create), பங்களித்தல் (Contribute) மற்றும் தொடருதல் (Continue) ஆகிய 5C கட்டமைப்பைப் பின்பற்றுகிறது.
  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்கள் வயோ சாத்தி (Vayo SAATHI) தன்னார்வலர் இயக்கத்தில் SCW SAMAVESH இணையதளம் அல்லது ஜீவன் (JEEVAN) செயலி மூலம் பதிவு செய்யலாம்.
  • இது டிஜிட்டல் கல்வியறிவு, சுகாதார விழிப்புணர்வு, தோழமை மற்றும் தலைமுறைகளுக்கிடையேயான திறன் பகிர்வு உள்ளிட்ட 12 கருத்துருப் பகுதிகளை உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்