December 27 , 2025
6 days
35
- மத்தியப் பிரதேச அரசானது 2026-27 ஆம் நிதியாண்டிலிருந்து ஒரு தொடர் வரவு செலவு மதிப்பீட்டு அறிக்கையை அறிமுகப்படுத்த உள்ளது.
- தொடர்ச்சியாக 2026-27, 2027-28, மற்றும் 2028-29 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான தோராயமான மதிப்பீடுகள் இந்த வரவு செலவு மதிப்பீட்டில் அடங்கும்.
- 2025-26 ஆம் ஆண்டின் மூலதனச் செலவினம் 82,513 கோடி ரூபாய் ஆகும் என்பதோடு இது இம்மாநிலத்தில் இதுவரையில் பதிவாகாத அதிகபட்சமாகும்.
- தொடர் வரவு செலவு திட்ட அறிக்கைகள் செயல்திறன் மற்றும் மாறிவரும் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் அவ்வப்போது திருத்தங்களை அனுமதிக்கின்றன.
- வரவிருக்கும் வரவு செலவு மதிப்பீடுகள் வேளாண்மை, விவசாயிகளின் வருமானம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தும்.

Post Views:
35