வரிகளின் உறுதித்தன்மையினை மேம்படுத்துதல் குறித்த திட்டமிடல் ஆவண அறிக்கை
October 7 , 2025 97 days 102 0
நிதி ஆயோக் அமைப்பானது, "Enhancing Tax Certainty in Permanent Establishment and Profit Attribution for Foreign Investors in India" என்ற தலைப்பிலான அதன் முதல் வரிக் கொள்கை திட்டமிடல் ஆவணத்தை அறிமுகப்படுத்தியது.
வரி விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்கணிப்புத்தன்மையை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நிரந்தர நிறுவன (PE) விதிகள், இலாப பண்புக்கூறு மற்றும் தகராறு தீர்வு தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளை இந்த ஆவண அறிக்கை நிவர்த்தி செய்கிறது.
வழக்குகளைக் குறைப்பதற்கும், இணக்கத்தை எளிதாக்குவதற்கும், நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான விருப்பத்தேர்வு, தொழில்துறை சார்ந்த அனுமான/முன்னறிவிப்பு வரிவிதிப்புத் திட்டத்தை இது முன்மொழிகிறது.