TNPSC Thervupettagam

வரிக் கழுதைப்புலிகள் பாதுகாப்பு

March 10 , 2026 13 hrs 0 min 68 0
  • புலம் பெயரும் வனவிலங்கு இனங்களின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் (CMS) கீழ், வரிக் கழுதைப்புலிகளை இணைப்பு I மற்றும் II-இல் சேர்க்க தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்துள்ளன.
  • இந்த முன்மொழிவு, CMS அமைப்பின் பங்குதார நாடுகளின் 15வது  மாநாட்டில் (COP15) விவாதிக்கப் படும்.
  • இந்தக் கூட்டம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் 29 ஆம் தேதி வரை பிரேசிலின் காம்போ கிராண்டேவில் நடைபெறவுள்ளது.
  • இணைப்பு I கடுமையான பாதுகாப்பு தேவைப்படும் அருகி வரும் நிலையில் உள்ள புலம்பெயர்ந்த இனங்களை உள்ளடக்கியது.
  • இணைப்பு II பாதுகாப்பிற்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் இனங்களை உள்ளடக்கியது.
  • வரிக் கழுதைப்புலி, IUCN செந்நிறப் பட்டியலில் 'அச்சுறுத்தல் நிலையை அண்மித்த' இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்