வரியில்லா இறக்குமதித் திட்டத்திற்கான தகுதி நீக்கம்
June 3 , 2019 2352 days 791 0
மே 31 அன்று வளர்ந்து வரும் நாடுகளுக்கான வரியில்லா இறக்குமதித் திட்டத்திற்கான இந்தியாவின் தகுதி நிலையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
அமெரிக்க வர்த்தக சட்டங்கள் தொடர்பானவற்றின் கீழ் அமெரிக்க நிறுவனங்களுக்கு “அதன் சந்தைகளுக்கு நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அணுகலை வழங்கும்” என்ற உத்தரவாதத்தை இந்தியா அளிக்காததன் காரணமாக அமெரிக்கா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் தேதியன்று இந்தியாவிற்கான அதன் முன்னுரிமை வர்த்தக முறையை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த வரியில்லாத் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளி இந்தியா ஆகும். இத்திட்டத்தின் கீழ் வரியில்லாமல் 120 நாடுகளைச் சேர்ந்த சில இறக்குமதிப் பொருட்கள் அமெரிக்காவிற்குள் நுழைகின்றன.