TNPSC Thervupettagam

வரி கழுதைப்புலி பாதுகாப்பு

September 5 , 2026 8 days 102 0
  • இந்தியாவில் உள்ள வரி கழுதைப்புலியின் (Hyaena hyaena) பாதுகாப்பு நிலையானது, சிறந்த மக்கள் தொகை தரவுகள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளின் தேவையினை எடுத்துக்காட்டுகிறது.
  • சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் வரி கழுதைப் புலி அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம் (Near Threatened) என்று பட்டியலிடப் பட்டு உள்ளது.
  • உலகளவில் சுமார் 5,000 முதல் 14,000 வரி கழுதைப் புலிகள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது, இதில் இந்தியாவில் சுமார் 1,000 முதல் 3,000 வரை உள்ளன; இந்தியாவிடம் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு ஏதும் இல்லை.
  • இது முக்கியமாக இறந்த விலங்குகளின் உடல்களை உண்ணும் ஒரு துப்புரவு பேணும் விலங்காகும், மேலும் விலங்குகளின் எச்சங்களில் இருந்து நோய் பரவும் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
  • இது 1972 வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் மிக உயர்ந்த சட்டப் பாதுகாப்பைக் கொண்டுள்ளது, ஆனால் இந்த இனத்திற்கான ஒரு ஒருங்கிணைந்த தேசிய செயல் திட்டம் இந்தியாவில் இல்லை.
  • வரி கழுதைப்புலி பாதுகாப்பிற்காக தமிழ்நாடு ₹14 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்