யுனெஸ்கோ அமைப்பானது, ஏழாவது "Bhasha Matters: State of the Education Report for India 2025" என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது.
இது பள்ளிக் கல்வியில் தாய்மொழி அடிப்படையிலான பன்மொழிக் கல்வி (MTB-MLE) மீது கவனம் செலுத்துகிறது.
இந்த அறிக்கை தெளிவான மாநில அளவிலான மொழிக் கொள்கைகள் மற்றும் பன்மொழி கற்பிப்பதற்கான சிறந்த ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட பத்து முக்கிய பரிந்துரைகளை வழங்குகிறது.
தாய்மொழிக் கல்விக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவை மேம்படுத்துவதற்கான ஒரு தேசிய திட்டத்தினை உருவாக்க இது பரிந்துரைக்கிறது.
தாய்மொழியில் கற்றல் ஆனது உள்ளடக்கம், கற்றல் விளைவுகள் மற்றும் மொழிகளைப் பாதுகாப்பதை மேம்படுத்துகிறது என்று அறிக்கை கூறுகிறது.