TNPSC Thervupettagam

வருடாந்திர நிதிநிலை அறிக்கை 2019-2020

July 8 , 2019 2219 days 741 0
  • நரேந்திர மோடியின் இரண்டாம் பதவிக் காலத்தின் முதல் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை ஜூலை 05 அன்று நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
  • காவோன், காரிப் மற்றும் கிசான் (கிராமம், வறுமை மற்றும் விவசாயி) என்பவை நரேந்திர மோடியின் இரண்டாம் அரசின் அனைத்துக் கொள்கைகளுக்கும் மையமாக உள்ளது.
  • இது 89-வது மத்திய வருடாந்திர நிதிநிலை அறிக்கை ஆகும்.
  • இது 1991 ஆம் ஆண்டின் பொருளாதார தாராளமயமாக்கத்திற்குப் பிந்தைய காலத்தில் இடைக்கால நிதி நிலையறிக்கைகள் நீங்கலாக 29-வது வருடாந்திர நிதிநிலை அறிக்கை ஆகும்.
  • சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மத்திய வருடாந்திர நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
  • இதுவரை மத்திய வருடாந்திர நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த ஒரே பெண்மணியாக முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி இருந்தார்.
  • 1970 ஆம் ஆண்டில் நிதியமைச்சரான மொரார்ஜி தேசாய் பதவி விலகியதையடுத்து நிதித் துறையையும் நிர்வகித்த இந்திரா காந்தி 1970-71 ஆம்  ஆண்டிற்கான  நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்