TNPSC Thervupettagam

வருமான வரிச் சட்டம் 2025

April 3 , 2026 14 hrs 0 min 20 0
  • 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டு வரப்பட்ட வருமான வரிச் சட்டம் 2025 ஆனது, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.  
  • வரிச் சட்டங்களை எளிமையாக்க, பிரிவுகளின் எண்ணிக்கை 819-லிருந்து 536 ஆகவும், விதிகளின் எண்ணிக்கை 511-லிருந்து 333 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
  • வரித் தாக்கல் செய்வதை எளிமையாகவும் வேகமாகவும் மாற்ற, மொத்த படிவங்களின் எண்ணிக்கை 390-லிருந்து 190 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ், கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்காக ₹10 லட்சத்திற்கு மேல் அனுப்பப்படும் பணத்திற்கான TCS (மூலத்திலேயே வசூலிக்கப்படும் வரி) 2 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.
  • FAST-DS (சிறிய வரி செலுத்துவோருக்கான வெளிநாட்டு சொத்துக்கள் வெளிப்படுத்தும் திட்டம்) மூலம், சிறிய வரி செலுத்துவோர் தங்களின் வெளிநாட்டு சொத்துக்களைக் குறைந்த அபராதத்துடன் தானாக முன்வந்து அறிவிக்க அனுமதிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்