வருமான வரி செலுத்துவோர் மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம்
August 14 , 2022 1157 days 586 0
வருமான வரி செலுத்துவோர் அக்டோபர் 01 முதல் அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டமான அடல் ஓய்வூதியத் திட்டத்தில் (APY) இணைவதற்கு இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
2015 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதியன்று அரசாங்கம் அடல் ஓய்வூதியத் திட்டம் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இது முக்கியமாக அமைப்புசாராத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளச் சந்தாதாரர்களுக்கு அவர்கள் 60 வயதை அடைந்த பிறகு, அவர்கள் அளித்தப் பங்களிப்புகளின் அடிப்படையில் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியமாக மாதம் ₹1,000 முதல் ₹5,000 வரை வழங்கப்படும்.
2022 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதிக்கு முன்பாக இத்திட்டத்தில் சேர்ந்த அல்லது இணைந்தச் சந்தாதாரர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.