வரும் பத்தாண்டுகளில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகள்
May 10 , 2018 2551 days 957 0
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய அறிக்கையின் படி வரும் பத்தாண்டுகளில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் உலகளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருப்பதோடு, சீனா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளைவிட ஆண்டுக்கு9% வளர்ச்சியைக் கொண்டு முன்னணியில் இருக்கிறது.
2026 ஆம் ஆண்டை நோக்கிய நிலையில், சீனா ஆண்டுக்கு9% என்ற அளவிலும், அமெரிக்கா ஆண்டுக்கு 3% என்ற அளவிலும் பொருளாதார வளர்ச்சியை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் ஆண்டுக்கு 3.5% என்ற அளவில் வளர்ச்சியைக் கொண்டிருக்கும்.
சிக்கலான புதிய பொருட்களை பொருளாதாரத்தில் கொண்டு வருவதற்கு தற்போதுள்ள அறிவை (Existing Knowledge) மீண்டும் புகுத்துதல் என்பது எந்த அளவிற்கு எளிமையானது என்பதை அளவிடும் சிக்கலான வாய்ப்புக் குறியீட்டில் (Complexity Opportunity Index - COI) இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2026-ஐ நோக்கிய நிலையில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் உகாண்டா ஆண்டுக்கு5% என்ற அளவில் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சகாராவிற்குக் கீழான ஆப்பிரிக்க நாடுகளில் பொருளாதார வளர்ச்சியானது பொருட்களை (Commodity) ஏற்றுமதி செய்யும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உகாண்டா (4-வது இடம்), தான்சானியா (4-வது இடம்) மற்றும் கென்யா (10-வது இடம்) ஆகிய நாடுகள் வரும் பத்தாண்டுகளில் உலகளவில் வேகமாக வளரும் நாடுகள் என கணிக்கப்பட்ட பொருளாதார நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ளன.
வங்கதேசம், வெனிசுலா மற்றும் அங்கோலா போன்ற குறைந்த வருமானமுள்ள நாடுகள் அவைகளுடைய பொருளாதாரத்தைப் பெருக்கும் திறன்களை பரவலாக்கம் செய்யத் தவறிவிட்டதாகவும், வரும் பத்தாண்டுகளில் இவை குறைந்த வளர்ச்சி வாய்ப்புகளை சந்திக்க இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.