TNPSC Thervupettagam

வர்க்கலா – பூஜ்ஜியக் கழிவு முன்னெடுப்பு

April 2 , 2026 5 days 53 0
  • நிலையான கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளுக்காக, உலகளாவிய 'பூஜ்ஜியக் கழிவை நோக்கிய 20 நகரங்கள்' முன்னெடுப்பின் கீழ் வர்க்கலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • சுற்றுச்சூழல் நகர்ப்புற அமைப்புகளை ஊக்குவிக்கவும், கழிவு உருவாவதைக் குறைக்கவும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் ஐக்கிய நாடுகள் மனிதக் குடியிருப்புகள் திட்டம் (UN-Habitat) ஆகியவற்றால் இந்த முன்னெடுப்பு முன்னெடுக்கப் படுகிறது.
  • கழிவுகளை அதன் ஆதாரத்திலேயே குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் வளங்களை வீணாக்காமல் பயன்படுத்தும் வட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது.
  • வர்க்கலாவின் புதுமையான கழிவு மேலாண்மை முறைகள், மேம்படுத்தப்பட்ட சுகாதார அமைப்புகள் மற்றும் குப்பை கிடங்குகளைக் குறைப்பதற்கான அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இத்தேர்வு அங்கீகரிக்கிறது.
  • இந்த முன்னெடுப்பானது நகரங்களுக்கு இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கிறது மற்றும் தூய்மையான சூழல் தொடர்பான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்