வர்த்தக பிரச்சனைகளின் விரைவான தீர்ப்பு வழங்கலுக்கான சட்டம்
May 9 , 2018 2645 days 852 0
உலக வங்கியின் எளிதில் வணிகம் செய்யும் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசையை அதிகரிப்பதற்காக வர்த்தக பிரச்சனைகளின் விரைவான தீர்ப்பு வழங்குகைக்கான வர்த்தக பிரச்சனை தீர்ப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவையானது வர்த்தக நீதி மன்றங்கள், வர்த்தகப் பிரிவுகள், உச்ச நீதிமன்றத்தின் வர்த்தக மேல் முறையீட்டுப் பிரிவுகள் சட்டத்தினை (Commercial Courts, Commercial Division and Commercial Appellate Division of High Courts Act) திருத்துவதற்கான அவசரச் சட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சட்ட திருத்தமானது, சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் உயர் நீதி மன்றங்கள் எந்தெந்த பகுதிகள் மீது சாதாரண நேரடி சிவில் அதிகாரத்தை கொண்டுள்ளனவோ அப்பகுதிகளில் மாவட்ட அளவில் வர்த்தக நீதிமன்றங்களை அமைக்க வழி அமைக்கின்றது.