சமீபத்தில், புது டெல்லியில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு இருதரப்புப் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டார்.
உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்காக வேண்டி ஐரோப்பிய ஒன்றிய-இந்திய வர்த்தக மற்றும் தொழில்நுட்பச் சபையை நிறுவுவதற்காக ஓர் ஒப்பந்தமானது மேற்கொள்ளப் பட்டது.
இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பச் சபையை நிறுவ உள்ள 2வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.