TNPSC Thervupettagam

வர்த்தக வசதி வழங்குதல் குறித்த மதிப்பீட்டு ஆய்வு – இந்தியா

July 28 , 2021 1478 days 509 0
  • ஐக்கிய நாடுகள் அவையினால் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக வசதி வழங்குதல் குறித்த ஆய்வில் இந்தியாவின் மதிப்பானது கணிசமான அளவில் மேம்பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் அவையின் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தினால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி வழங்குதல் குறித்த உலகளாவிய மதிப்பீட்டில் இந்தியா 90.32 சதவீத மதிப்பினைப் பெற்றுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் இருந்த 78.49 சதவீதத்திலிருந்து இந்தியா தற்போது முன்னேறி உள்ளது.
  • 143 நாடுகள் மதிப்பிடப்பட்ட இந்த ஆய்வில் (2021) அனைத்து ஐந்து குறிகாட்டிகளிலும் இந்தியாவின் மதிப்பு முன்னேற்றம் கண்டுள்ளது.
  • அந்த ஐந்து குறிகாட்டிகள் வெளிப்படைத்தன்மை, முறைமைகள், நிறுவனம் சார்ந்த ஏற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு, காகிதமில்லா வர்த்தகம் மற்றும் எல்லைகளுக்கிடையில் காகிதமில்லா வர்த்தகம் ஆகியனவாகும்.
  • 2021 ஆம் ஆண்டில் வெளிப்படைத் தன்மை என்ற குறிகாட்டியில் இந்தியா 100 சதவீத மதிப்பைப் பெற்றுள்ளது.
  • இந்த மதிப்பீட்டு ஆய்வானது ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகிறது.
  • ஒரு நாடு பெறும் அதிக மதிப்பானது அதன் முதலீட்டு முடிவுகளில் வணிகர்களுக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்