TNPSC Thervupettagam

வறட்சிநிலை முரண்பாடு பற்றிய கண்ணோட்டக் குறியீடு

August 2 , 2022 1116 days 552 0
  • இந்திய வானிலை ஆய்வு மையமானது, சமீபத்தில் ஜூலை மாதத்திற்கான இந்தக் குறியீட்டை வெளியிட்டது.
  • இந்தியாவில் கிட்டத்தட்ட 69% நிலமானது வறண்ட நிலமாக உள்ளது.
  • 756 மாவட்டங்களில் கிட்டத் தட்ட 660 மாவட்டங்கள் (85%) வெவ்வேறு அளவிலான வறட்சியை எதிர்கொள்கின்ற அதே சமயம் 63 மட்டுமே வறட்சியற்றவையாக உள்ளன.
  • குறைந்தபட்சம் 196 மாவட்டங்கள் கடுமையான வறட்சியின் பிடியில் உள்ள நிலையில் அதில் 65 மாவட்டங்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ளன.
  • விவசாயத்தில் வறட்சியின் தாக்கங்கள், குறிப்பாக ஈரமான மற்றும் வறண்டப் பருவங்கள் ஆனது பருவநிலை மண்டலங்களின் ஒரு பகுதியாக இருக்கும் வெப்ப மண்டலங்களில் அதிகமாக உள்ளன.
  • இந்த முறையைப் பயன்படுத்தி குளிர்காலம் மற்றும் கோடைக்காலப் பயிரிடல் பருவங்களை மதிப்பிடலாம்.
  • பரந்த அளவிலான இந்த வறண்டப் பகுதிகள் ராஜஸ்தானின் பாலைவனத்திலும், கட்ச் வளைகுடா மற்றும் பஞ்சாப் மற்றும் குஜராத்தின் பகுதியளவு வறண்டப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்