புவியானது, G5 நிகழ்வாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆண்டின் வலிமையான புவி காந்தப் புயலை எதிர் கொண்டு வருவதாக நாசா உறுதிப்படுத்தியது.
புவியை அடைவதற்கு முன்பு ஒரு பெரிய பிளாஸ்மா அலையில் இணைந்த சூரிய வெப்ப உமிழ்வுகள் (CMEs) எனப்படும் பல சூரிய வெடிப்புகளால் இந்தப் புயல் தூண்டப் பட்டது.
இந்த நிகழ்வு ஆனது வடக்கு ஐரோப்பா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு முழுவதும் பரவலான துருவ மின்னொளி (அரோரா) காட்சிகளை ஏற்படுத்தியது.
அறிவியலாளர்கள், புவியின் வளைய மின்னோட்டக் (Disturbance Storm Time-Dst) குறியீட்டில் கூர்மையான வீழ்ச்சியைக் கவனித்தனர், இது அதிகப் புவி காந்தச் செயல்பாட்டைக் குறிக்கிறது.
இந்தப் புயல், 2003 ஆம் ஆண்டின் "ஹாலோவீன் புயல்கள்" போலவே செயற்கைக் கோள் தகவல் தொடர்பு, GPS அமைப்புகள் மற்றும் மின் பகிர்மானக் கட்டமைப்புகளில் இடையூறினை ஏற்படுத்தியது.