வளங்களின் திறமையான மேலாண்மை குறித்த தேசியக் கொள்கை
August 14 , 2019 2102 days 888 0
மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகம் வளங்களின் திறமையான மேலாண்மை குறித்த தேசிய வரைவுக் கொள்கையை வெளியிட்டுள்ளது.
இந்தக் கொள்கையானது பின்வரும் இலக்குகளை அடைவதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்குள் 100 சதவிகிதம் பாலி எத்திலீன் டெரிப்தாலேட் நெகிழிப் பொருளின் மறுசுழற்சி
2025 ஆம் ஆண்டிற்குள் எந்தவொரு மறுசுழற்சிக் கழிவுகளையும் நிலத்தில் இட்டு அழிப்பது (நெகிழி, உலோகம், மரம்) மீதான மொத்தத் தடை.
2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பயன்பாட்டு இறுதிக் காலத்தை அடைந்த அனைத்து வாகனங்களின் 90 சதவிகித மறுசுழற்சி
இது “உற்பத்தியாளர் நீட்சிப் பொறுப்புடைமை” என்ற கருத்துருவை, அதாவது ஒரு பொருளின் இறுதிக் காலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அதன் உற்பத்தியாளரின் மீது பொறுப்பைச் சுமத்துவது என்ற ஒன்றை இந்தியாவில்முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.