TNPSC Thervupettagam

வளர்சிதை மாற்ற சுகாதார நெருக்கடி நிலை

March 10 , 2026 13 hrs 0 min 73 0
  • Global Burden of Disease Study (GBD) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 1990–2023 காலகட்டத்தில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அதிக வளர்சிதை மாற்ற நோய் சுமையைக் கொண்டுள்ளன.
  • இந்த ஆய்வு, 'பல காரணிகளால் ஏற்படும் ஆயுட்கால இழப்புகள்' (DALYs) என்பதைப் பயன்படுத்தி சுகாதார இழப்பை அளவிடுகிறது.
  • நீரிழிவு நோய் வகை 2 , உயர் இரத்த அழுத்தம், அதிக உடல் நிறைக் குறியீடு (BMI), அதிக குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போப்புரத (LDL) கொழுப்பு மற்றும் வளர்சிதை மாற்றச் செயலிழப்பு சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய் (MASLD) ஆகியவை இந்த ஆய்வில் ஆராயப் பட்ட முக்கிய வளர்சிதை மாற்ற நிலைகளாகும்.
  • 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் நீரிழிவு நோய் வகை 2 ஆல் சுமார் 21 மில்லியன் DALYs மற்றும் 5.8 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • இந்தியாவில் உயர் இரத்த அழுத்தம் காரணமாக சுமார் 3.8 கோடி DALYs மற்றும் 15.7 லட்சம் இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்