TNPSC Thervupettagam

வளர்ந்த எழுச்சிமிகு கிராமங்கள் திட்டம் 2026

June 9 , 2026 5 days 106 0
  • எல்லைப்புறக் கிராமங்களில் இளைஞர்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்காக 'வளர்ந்த எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின்' (VVVP) 2026 ஆம் ஆண்டிற்கான முதல் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டமானது, இளைஞர் விவகாரங்கள் துறையின் கீழ் உள்ள ‘மேரா யுவ பாரத்’ (MY Bharat) அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டத்தின் முதல் கட்டமானது லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 43 எல்லைப்புறக் கிராமங்களை உள்ளடக்கியது, இதில் 250 தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.
  • ஏழு நாட்கள் நடைபெறும் இத்திட்டமானது, எல்லை குறித்த விழிப்புணர்வு, கலாச்சாரப் பரிமாற்றம், நிர்வாகம், கிராம மேம்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • இது மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்