வாக்காளர் தகுதிச் சான்று குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம்
July 28 , 2025 5 days 87 0
வாக்காளர் தகுதிச் சான்றுகள் குறித்து தேர்தல் ஆணையம் (EC) உச்ச நீதிமன்றத்தில் பின்வருவனவற்றை உறுதியளித்தது.
சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) என்றஒரு நடவடிக்கையின் கீழ் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய ஒருவர் தகுதியற்றவர் எனக் கண்டறியப்பட்டால் மட்டுமே அவர் குடி மகனாக இருப்பதற்கான தகுதியினை இழக்க மாட்டார்.
2003 ஆம் ஆண்டில் பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே பெயர்கள் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள், தங்கள் தகுதியை நிரூபிக்க ஆவணங்களை வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக அது கூறியது.
கடைசியான தீவிரத் திருத்தம் 2003 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
சட்டம் மற்றும் அரசியலமைப்பின் (326) கீழ், "வாக்களிக்கும் அரசியலமைப்பு உரிமையை செயல்படுத்துவதற்காக" குடியுரிமைச் சான்றைக் கோரும் அதிகாரம் என்பது தன்னிடம் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது.
வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான 11 குறிகாட்டி ஆவணங்களின் பட்டியலில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளைச் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்ட போதிலும், SIR நோக்கத்திற்காக அவற்றை "தனி ஆவணங்களாக" ஏற்றுக் கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.
ஆதார் என்பது வெறும் அடையாளச் சான்று மட்டுமேயாகும்.
ஆதார் அட்டையிலேயே அது ஒரு குடியுரிமைச் சான்று அல்ல என்ற மறுப்புக் கூற்று உள்ளது.
"போலி குடும்ப அட்டைகள் பரவலாக வழங்கப்பட்டு வருவதால், அந்த ஆவணம் ஒரு நம்பகத் தன்மையற்றதாக மாறியுள்ளது" என்று தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியது.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை (EPIC) பொறுத்தவரை, அவை வாக்காளர் பட்டியல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை என்று அது நியாயப் படுத்தியது.