கதமன் கிராமம் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தின் பலன்பூர் தாலுக்காவில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் 1955 ஆம் ஆண்டு முதல் கிராமப் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப் பட வில்லை.
இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிராமத்தின் தலைமை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
அந்தக் கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 7,000 என்பதோடு அங்கு சுமார் 4,600 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் ஆகும்.
இந்து மற்றும் முஸ்லிம் குடியிருப்பாளர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் சர்பாஞ்ச் மற்றும் துணை சர்பாஞ்ச் பதவிகளை மாற்றுகிறார்கள்.
2025 ஆம் ஆண்டில், சர்பாஞ்ச் பதவியானது அதிகாரப்பூர்வச் சுழற்சிக் கொள்கையின் கீழ் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.
கதமன் ஒருமித்த அடிப்படையிலான பஞ்சாயத்து (சாம்ராஸ்) ஆக தகுதி பெறுகிறது என்றாலும் சாம்ராஸ் கிராம் யோஜனா மானியம் எதுவும் பெறவில்லை.
சாம்ராஸ் கிராம் யோஜனா என்பது அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நரேந்திர மோடியின் கீழ் தொடங்கப்பட்ட குஜராத் மாநில அரசின் திட்டமாகும் என்பதோடு இது போட்டியற்றப் பஞ்சாயத்து தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், குஜராத்தில் 4,564 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டன என்பதோடு அவற்றில் 761 பஞ்சாயத்துகள் சாம்ராஸ் பஞ்சாயத்துகளாக அறிவிக்கப்பட்டன.
சாம்ராஸ் பஞ்சாயத்துகள் சுமார் 3 லட்சம் ரூபாய் முதல் 13 லட்சம் ரூபாய் வரை மானியங்களுக்குத் தகுதியுடையவை.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சார்ந்த குடியிருப்பாளர்கள் அங்கு இல்லாத போதிலும், ஓர் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலிடப்பட்ட பழங்குடி (ST) மன்றம் / வார்டு காரணமாக கதாமன் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
ST இட ஒதுக்கீடு என்பது அக்கிராமத்தில் தற்காலிகமாகப் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசு அதிகாரியின் கடந்த காலப் பதிவிலிருந்து உள்ளது.
வெளிப்புற ஊக்கத் தொகைகள் இல்லாமல் அந்தச் சமூகம் அதன் 70 ஆண்டு கால ஜன நாயக ஒருமித்த மாதிரியை தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறது.