TNPSC Thervupettagam
April 22 , 2022 1200 days 557 0
  • இந்தியக் கடற்படையின் P75 என்ற திட்டத்தின் ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான வாக்சீர் என்பது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • P75 திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களில் இது கடைசிக் கப்பலாகும்.
  • P75 திட்டத்தின் கீழ், ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் காந்தேரி, ஐஎன்எஸ் கரஞ்ச் மற்றும் ஐஎன்எஸ் வேலா ஆகியவை படையில் இணைக்கப்பட்டன.
  • வாக்சீர் கப்பலின் கடல்பரப்பிலான இயக்கம் குறித்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
  • சாண்ட் ஃபிஷ் (sandfish) எனப்படும் இந்தியப் பெருங்கடலின் ஆழ்கடலில் வாழும் ஒரு வேட்டையாடும் மீனின் பெயரைக் கொண்டு இதற்கு வாக்சீர் என்று பெயரிடப்பட்டது.
  • ரஷ்யாவிலிருந்துப் பெறப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பலான வாக்சீர் 1974 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியன்றுப் படையிலிருந்து விலக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்