வானிலிருந்து வான்வழி இலக்குகளை தாக்கும் ஆயுதச் சோதனை
January 20 , 2019 2399 days 721 0
இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிட் நிறுவனமானது பளு குறைந்த போர் விமானத்தை (Light Combat helicopter- LCH) வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இது வானிலிருந்து வான்வழி இலக்குகளை அழிக்கும் சோதனையில் பறக்கும் விமானத்தில் உள்ள இலக்கை ஏவுகணையை மூலம் தாக்கி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
நாட்டில் ஒரு ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து வான்வழி இலக்குகளை தாக்கி அழிக்கும் சோதனை செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இதில் தலைக்கவசம் வழியேயான பார்வை மற்றும் முன்புறம் நோக்கின அகச்சிவப்பு கதிர் மூலமான பார்வை அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இப்போது LCH விமானிகள் தரை மற்றும் வான்பகுதியில் உள்ள எந்த இலக்குகளையும் கண்டறிந்து அழிக்க முடியும்.