வானிலை, காலநிலை மற்றும் நீர் போன்றவற்றால் ஏற்படும் தீவிர நிலைகளினால் நிகழும் இறப்பு மற்றும் பொருளாதார இழப்புகளுக்கான தொகுப்பு (1970-2019)
September 11 , 2021 1422 days 564 0
இது ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பால் வெளியிடப்பட்டது.
கடந்த ஐந்து தசாப்தங்களில் கடுமையான வானிலை நிகழ்வுகள் காரணமாக வளர்ந்த நாடுகள் 3.6 டிரில்லியன் டாலர் என்ற அளவிற்குப் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளன.
ஏழை நாடுகளில் அதிக இறப்பு எண்ணிக்கையானது தீவிர மீட்பு நடவடிக்கையால் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.
உலகின் 10 மிக மோசமான பேரழிவுகளில் 2017 ஆம் ஆண்டில் மட்டும் ஹார்வி ($ 96.9 பில்லியன்), மரியா ($ 69.4 பில்லியன்) மற்றும் இர்மா ($ 58.2 பில்லியன்) என்ற மூன்று சூறாவளிகள் நிகழ்ந்துள்ளன.