TNPSC Thervupettagam

வான் தீவு மறுசீரமைப்பு

February 28 , 2026 18 days 68 0
  • வான் (vaan) தீவின் மறுசீரமைப்புக்கான தொழில்நுட்ப மதிப்பீடானது செலவுக்கும் பலனுக்குமான  விகிதத்தை (BCR) 2.34 ஆக அறிவித்தது.
  • இந்த மதிப்பீட்டை தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு திட்டம், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் IIT-மெட்ராஸ் ஆகியவை இணைந்து நடத்தின.
  • மன்னார் வளைகுடாவில் உள்ள 21 மக்கள் வசிக்காத பவளப் பாறைத் தீவுகளில் வான் தீவும் ஒன்றாகும்.
  • 1969 மற்றும் 2015 க்கு இடையில் பவள அறுவடை, பாறைகள் சீரழிவு மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக தீவு 92% சுருங்கியது.
  • அரிப்பைத் தடுக்கவும் தீவை மீட்டெடுக்கவும் 2015 முதல் செயற்கைப் பவளப்பாறை தொகுதிகள் பயன்படுத்தப்பட்டன.
  • 26.37 கோடி செலவிலான இந்தத் திட்டம 61.67 கோடி மதிப்பிலான சமூக-சுற்றுச்சூழல் பலன்களை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்