இந்திய விமானப் படை அதிகாரியின் தலைமையில் “வான் பாதுகாப்புக் கட்டுப்பாட்டகம்” (Air Defence Command - ADC) என்று அழைக்கப்படும் முதலாவது ஒருங்கிணைந்த முப்படைக் கட்டுப்பாட்டகத்தை நிறுவ இருப்பதாக இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிவித்துள்ளார்.
ADC ஆனது இராணுவம், விமானப் படை மற்றும் கடற் படையின் வான் பாதுகாப்பு மற்றும் அவற்றிற்குச் சொந்தமான பொருள்களை ஒருங்கிணைத்து, நாட்டிற்கு வான் பாதுகாப்பை வழங்க இருக்கின்றது.
இவர் கூட்டுத் தீபகற்பக் கட்டுப்பாட்டகம் மற்றும் ஒரு தளவாடக் கட்டுப்பாட்டகம் ஆகியவற்றை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.