ஆற்காடு இளவரசர் அறக்கட்டளையினால் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க வாலாஜா பெரிய மசூதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
வாலாஜா பெரிய மசூதி திருவல்லிக்கேணி பெரிய மசூதி என்றும் அழைக்கப் படுகிறதுஎன்பதோடுஇது சென்னையின் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதியாகும்.
இது முதலில் 1795 ஆம் ஆண்டு ஆற்காடு இளவரசரின் முன்னோரும், கர்நாடக நவாபுமான முகமது அலி வாலாஜாவால் கட்டப்பட்டது.
இந்த மசூதியானது மரம் அல்லது எஃகு எதுவும் பயன்படுத்தப்படாமல், முழுமையாக கருங்கற்களால் கட்டப்பட்டது.
இது முகலாயக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது என்பதோடுஇதில் இரண்டு மினாரட்கள் / கோபுரங்கள் உள்ளன இருப்பினும் இது ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டிடக்கலை வடிவமைப்பைப் பின்பற்றவில்லை.
மசூதியின் முன்புறம் காயிதே மில்லத் எம். முகமது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது.
முகமது அலி கான் வாலாஜா 1749 ஆம் ஆண்டு தன்னை நவாபாக அறிவித்துக் கொண்டார் ஆனால் அவரது பதவி சந்தா சாஹிப்பால் எதிர்க்கப்பட்டது.
1752 ஆம் ஆண்டில், பல மோதல்களுக்குப் பிறகு, சந்தா சாஹிப்பின் படைகளும் அவரது பிரெஞ்சு கூட்டாளிகளும் ஆற்காட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமின் அங்கீகாரத்துடன், 1765 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று வாலாஜா அதிகாரப்பூர்வமாக நவாபாக அறிவிக்கப்பட்டார்.
அவர் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கூட்டாளியாக இருந்தார் மற்றும் சந்தா சாஹிப்பிற்கு எதிரான கர்நாடகப் போர்களில் அவர்களுக்கு ஆதரவளித்தார்.
ஆற்காடு இளவரசர் அறக்கட்டளையின் பல மாத புனரமைப்புக்குப் பிறகு, மசூதி பொது மக்களின் பயன்பாட்டிற்காக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.