விகாஸ் இயந்திரம் (எஞ்ஜின்)
July 23 , 2021
1460 days
638
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது திரவ எரிபொருளால் இயங்கும் விகாஸ் என்ற இயந்திரத்தின் மூன்றாவது நீண்ட நேர வெப்பச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
- இந்தச் சோதனையானது தமிழ்நாட்டின் மகேந்திர கிரியிலுள்ள இஸ்ரோவின் உந்து சக்தி வளாகத்தின் இயந்திரச் சோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.
- இதன் மூலம் ககன்யான் எனும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான தனது முதல் திட்டத்தில் இஸ்ரோ மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.
- இது மனிதனால் மதிப்பிடப்பட்ட ஜிஎஸ்எல்வி MK III ராக்கெட்டினுடைய முதன்மை L110 திரவ நிலை (இயந்திரம்) என்ற ஒரு நிலைக்காக மேற்கொள்ளப்பட்டது.

Post Views:
638