நாடு முழுவதும் 2,87,967 திட்டப் பதிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், "மிகப்பெரிய புத்தாக்கத் தீர்வுப் போட்டி" என்ற பிரிவில் விக்சித் பாரத் பில்டத்தான் (VBB) 2025 ஆனது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
அடல் புத்தாக்கத் திட்டம் (AIM), நிதி ஆயோக் மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றுடன் இணைந்து, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் (DoSEL) மூலம் கல்வி அமைச்சகம் இந்த முன்னெடுப்பை ஏற்பாடு செய்தது.
இந்த முன்னெடுப்பானது, யோசனை மற்றும் முன்மாதிரிப் பிரிவுகள் மூலம் பள்ளி மாணவர்களிடையே படைப்பாற்றல், அறிவியல் ஆர்வம், தொழில்முனைவோர் திறன் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
ஆத்மநிர்பார் பாரத், சுதேசி, வோக்கல் ஃபார் லோக்கல் மற்றும் சம்ரித் பாரத் ஆகிய நான்கு தூண்களை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் உல்லாஸ் (ULLAS - சமுதாயத்தில் உள்ள அனைவருக்குமான வாழ்நாள் கல்வியைப் புரிந்துகொள்ளுதல்) - நவ பாரத் சாக்ஷர்தா கார்யக்ரம் திட்டத்தின் கீழ் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன.