TNPSC Thervupettagam
May 5 , 2026 15 hrs 0 min 41 0
  • இந்தியாவின் முதல் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சுற்றுப்பாதை ஏவுகலமான விக்ரம்-1 தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்த ஏவுகலத்தை ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட புத்தொழில் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உருவாக்கியுள்ளது.
  • விக்ரம்-1 என்பது மேம்பட்ட 3D-அச்சிடப்பட்ட இயந்திரங்களைக் கொண்ட மூன்று-கட்ட கார்பன்-கலப்பு ஏவு வாகனமாகும், மேலும் இது திட மற்றும் திரவ உந்து விசை அமைப்புகள் இரண்டையும் பயன்படுத்துகிறது.
  • இது அடிமட்டப் புவி சுற்றுப்பாதைக்கு 350 கிலோ வரையிலான எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது மற்றும் இந்தியாவின் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட முதல் சுற்றுப்பாதை ஏவுகலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இதன் முதல் ஏவுதல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்