TNPSC Thervupettagam
November 30 , 2025 12 days 105 0
  • விக்ரம்-I என்பது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் வணிக பயன்பாட்டு சுற்றுப்பாதை ஏவு கலம் ஆகும்.
  • பிரதமர் இந்த ஏவு கலத்தினை வெளியிட்டு, ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதத்திற்கு ஒரு சுற்றுப்பாதை ராக்கெட்டை உற்பத்தி செய்யக் கூடிய ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தைத் திறந்து வைத்தார்.
  • விக்ரம்-I ஆனது சிறிய செயற்கைக்கோள்களை புவியின் தாழ் மட்ட சுற்றுப்பாதையில் ஏவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதோடு ஸ்கைரூட்டின் துணை சுற்றுப் பாதை நிலையிலிருந்து சுற்றுப்பாதை ஏவல் நிலைக்கு மாறுவதை இது குறிக்கிறது.
  • ஸ்கைரூட் நிறுவனம் முன்னதாக 2022 ஆம் ஆண்டில் விக்ரம்-S என்ற இந்தியாவின் முதல் தனியார் துணை சுற்றுப்பாதை ஏவு கலத்தினை விண்ணில் ஏவியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்