TNPSC Thervupettagam
May 3 , 2026 14 hrs 0 min 27 0
  • மேம்படுத்தப்பட்ட கவச வாகனங்களுக்கான விக்ரம் VT 21 திட்டத்தைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தொடங்கியுள்ளது.
  • இது இந்திய இராணுவத்தின் எதிர்கால காலாட்படைப் போர் வாகனத்திற்கான (FICV) சக்கரங்கள் மற்றும் சங்கிலித்தொடர் வாகனங்களை உள்ளடக்கியது.
  • இது பல்வேறு நிலப்பரப்புகளில் அதிக இயக்கத் திறனுடன், தோட்டாக்கள், குண்டு வெடிப்புகள் மற்றும் சிதறல்களுக்கு எதிரான வலுவான கவசப் பாதுகாப்பைக் கொண்டுள்ளது.
  • இது 30 மிமீ ஆளில்லா சுழல் துப்பாக்கி, இயந்திரத் துப்பாக்கி மற்றும் பீரங்கி எதிர்ப்பு எறிகணைகள் (ATGM) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இது நிலம் மற்றும் நீர் ஆகிய இரண்டிலும் இயங்கும் திறனைக் கொண்டுள்ள இது சிறப்பு உந்துவிசை அமைப்புகளைப் பயன்படுத்தி நீரில் செயல்படக் கூடியது.
  • உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன், இந்த அமைப்பின் சுமார் 65% இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்