விசாகப்பட்டினத்தில் கவசமிடப்பட்ட ஆயுத ஏவல் பெட்டக அமைப்பு
October 5 , 2024 231 days 222 0
விசாகப் பட்டின நகரத்தின் கடற்கரை மணற்பரப்பில் ஏற்பட்ட பருவமழை அரிப்பின் காரணமாக இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட கவசமிடப்பட்ட ஆயுத ஏவல் பெட்டக அமைப்பின் ஒரு பகுதி வெளிப்பட்டது.
இவை, இரண்டாம் உலகப் போரின் உச்ச கட்ட செயல்பாடுகளின் போது கட்டமைக்கப் பட்டது.
இதில் வீரர்கள் ஆயுதங்களை ஏவுவதற்கு ஏதுவாக துளைகள் நிறுவப்பட்டுள்ளன.
எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொண்டு, எதிரிகள் மீது ஆயுதங்களை ஏவ வீரர்களுக்கு இது உதவியது.