2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று லடாக்கின் கார்கிலில், எல்லைச் சாலைகள் அமைப்பின் (BRO) விஜயக் திட்டத்தின் 15வது ஸ்தாபன/எழுச்சி தினம் கொண்டாடப் பட்டது.
இந்த திட்டமானது, 15 ஆண்டுகளுக்கும் மேலாக லடாக் முழுவதும் 1,400 கிலோ மீட்டருக்கும் மேலாக உள்ள தொலைவிலான சாலைகளையும் 80 முக்கியப் பாலங்களையும் கட்டமைத்துப் பராமரித்து வருகிறது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மலைப் பகுதிகள் போன்ற உயரமான இடங்களுக்கான போக்குவரத்து இணைப்பிற்கான சாதனையாக குறுகிய நாட்களுக்குள் அதாவது குளிர்கால வழித்தட தடுப்புக் காலத்திற்குப் பிறகு 31 நாட்களுக்குள் உத்தி சார்ந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த சோஜிலா கணவாய் மீண்டும் திறக்கப்பட்டது.
1,200 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்கத் திட்டத்தில் சாலைகளை அகலப் படுத்துதல், சுரங்கப்பாதைகள் மற்றும் பாலங்கள் கட்டுதல் மற்றும் மேம்படுத்தப் பட்ட கட்டுமானத் தொழில்நுட்பங்களை உட்சேர்த்தல் ஆகியவை அடங்கும்.