TNPSC Thervupettagam

விண்மீனிடை வால்நட்சத்திரத்தில் மீத்தேன்

June 6 , 2026 8 days 97 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது 3I/அட்லஸ் (3I/ATLAS) என்ற விண்மீனிடை வால்நட்சத்திரத்தில் மீத்தேன் இருப்பதைக் கண்டறிந்துள்ளதுடன் சூரியக் குடும்பத்திற்கு வெளியே தோன்றிய ஒரு பொருளின் மீது மீத்தேன் நேரடியாகக் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்தத் தொலைநோக்கியின் இடை-அகச்சிவப்பு கருவி (MIRI) மூலம் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
  • வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் சென்ற பிறகு மீத்தேன் இருப்பதைக் கண்டறிய முடிந்ததாக அறிவியலாளர்கள் கண்டறிந்தனர், இது மேற்பரப்பிற்கு அடியில் சிக்கி இருந்த மீத்தேன் சூரிய வெப்பத்தால் வெளியிடப்பட்டதை உணர்த்துகிறது.
  • சூரியக் குடும்பத்தில் உள்ள பெரும்பாலான வால்நட்சத்திரங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வால்நட்சத்திரம் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடைக் கொண்டுள்ளது.
  • இந்த வேதியியல் பண்புகள், பெரும்பாலான சூரியக் குடும்ப வால்நட்சத்திரங்கள் உருவான சூழலில் இருந்து மாறுபட்ட ஒரு சூழலில் 3I/ATLAS உருவாகியுள்ளது என்பதைக் குறிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்