விண்வெளிச் சொத்துகளைப் பாதுகாத்தல்
August 8 , 2019
2106 days
698
விண்வெளிக் கழிவுகளைக் கண்காணிக்கவும் தன்னுடைய விண்வெளிப் பொருட்களைப் பாதுகாக்கவும் தனக்குச் சொந்தமான ஒரு அமைப்பை உருவாக்குவதற்குத் தொலைநோக்கிகள் மற்றும் ரேடார் ஆகியவற்றின் அமைப்பை இஸ்ரோ அமைத்துக் கொண்டிருக்கின்றது .
தற்பொழுது இஸ்ரோவானது விண்வெளியில் தொலைத் தொடர்பு , கள இயக்கம் மற்றும் கண்காணிப்புச் செயற்கைக் கோள்கள் உள்ளிட்ட செயல்பாட்டில் உள்ள 50 செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது .
இது பின்வருவனவற்றிற்காக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய மற்றும் துல்லியத் தன்மையற்ற தரவு ஆகியவற்றிற்கு நோராடைச் ( NORAD/ North America Aerospace Defense Command - வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு நிலையம் ) சார்ந்திருக்கின்றது .
விண்வெளிக் கழிவுகளைத் தொடர்ந்து கண்காணித்தல்
செயல்பாட்டில் உள்ள மற்றும் செயல்பாட்டில் இல்லாத நமது செயற்கைக் கோள்களைக் கண்காணித்தல் .
விண்வெளிச் சூழ்நிலை விழிப்புணர்வு கட்டுப்பாட்டு மையத்திற்கு பெங்களுருவில் அடிக்கல் நாட்டப்பட்டது .
நாட்டின் நான்கு திசைகளிலும் தொலைநோக்கிகள் மற்றும் ரேடார்கள் ஆகியவற்றை இஸ்ரோ அமைக்கவிருக்கின்றது .
திருவனந்தபுரம் , அபு மலை ( இராஜஸ்தான் ), நாட்டின் வடக்கு கோடி ஆகியவற்றில் தொலைநோக்கி
வடகிழக்கில் ஒரு ரேடார் .
இந்த அமைப்பானது விண்வெளிச் சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை இயக்குனரகத்தின் கீழ் அமைக்கப்பட விருக்கின்றது .
Post Views:
698