பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுவானது விண்வெளிப் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பை (DSRA - Defence Space Research Agency) அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
DSRA ஆனது விண்வெளிப் போர் சார்ந்த ஆயுத அமைப்புகள் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை உருவாக்கும் பணியை மேற்கொள்ளும்.
இது விண்வெளிப் பாதுகாப்பு அமைப்பிற்கு (DSA - Defence Space Agency) பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு உதவியை அளிக்கவிருக்கின்றது.
DSA ஆனது விமானப் படையின் துணைத் தளபதி நிலையில் உள்ள அதிகாரியின் கீழ் பெங்களுருவில் அமைக்கப்படவிருக்கின்றது. இது முப்படைகளின் விண்வெளி சார்ந்த திறன்களை படிப்படியாக மேற்கொள்ளவிருக்கின்றது.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட செயற்கைக் கோள் எதிர்ப்புப் பரிசோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியது.