விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் படங்கள்
April 12 , 2023 865 days 398 0
புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளின் (ஓஷன்சாட்-3) பெருங்கடல் வண்ண மாற்ற கண்காணிப்புக் கருவி மூலம் எடுக்கப்பட்ட புவியின் புதிய வியத்தகுப் படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
இந்தப் படங்களானது விண்கலம் மூலம் பெறப்பட்ட சில தரவுகளிலிருந்துத் தேசியத் தொலை உணர்வு மையத்தினால் (NRSC) உருவாக்கப்பட்ட நிறத் திட்டு ஆகும்.
அவை உலகளாவிய நிலம் மற்றும் கடல் சார்ந்த பரப்புகளில் உள்ள தாவரப் பரவல் பற்றியத் தகவல்களை வழங்குகின்றன.
ஓஷன்சாட்-3 என்பது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் PSLV-C54 ஆய்வுப் பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரோ நிறுவனத்தினால் விண்ணில் ஏவப் பட்ட ஒரு நுண்ணியச் செயற்கைக்கோள் ஆகும்.