டாரஸ் மூலக்கூறு திரள் 1 (TMC1) ஆனது பல சிறிய, மூடிய படலம் கொண்ட பலசுழல் சேர்ம நறுமணமிக்க ஹைட்ரோ கார்பன்களைக் (PAH) கொண்டுள்ளது என்பதோடு அவை வியக்கத்தக்க வகையில் தீவிர நட்சத்திர ஒளியிலும் மிக நன்கு நீடித்து காணப் படுகின்றன.
அவை விண்மீன் மண்டலத்தில் உள்ள கார்பனில் சுமார் 20% பங்கினைக் கொண்டு உள்ளன மற்றும் அவற்றின் வளையம் போன்ற அமைப்பு காரணமாக நிலையானவை ஆக உள்ளன.
பலசுழல் சேர்ம நறுமணமிக்க ஹைட்ரோகார்பன்கள் (PAH) விண்வெளியில் மிகவும் பொதுவாகக் காணப்படும் தட்டையான கார்பன் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் ஆகும்.
ஆஸ்திரேலியா, சுவீடன் மற்றும் ஐக்கியப் பேரரசினைச் சேர்ந்த அறிவியலாளர்கள், இண்டெனில் கேஷன்கள் ஒளியை (மீண்டும் மீண்டும் ஒளிரும் தன்மை கொண்டவை) வெளியிடுவதன் மூலம் மிக விரைவாக குளிர்ச்சியடைவதால், அவை விண்வெளியில் நீடித்திருக்க உதவுகின்றன என்பதைக் கண்டறிந்தனர்.
ஸ்டாக்ஹோமில் உள்ள DESIREE என்ற ஆய்வகத்தில், இந்த அயனிகள் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மற்ற PAH களை விட வேகமாக ஆற்றலை இழப்பதைக் கண்டனர்.