TNPSC Thervupettagam
September 9 , 2018 2451 days 1278 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO – Indian Space Research Organisation) தயாரித்த விண்வெளி ஆடையை அந்நிறுவனம் காட்சிப்படுத்தியது.
  • பெங்களுரூ விண்வெளிக் கண்காட்சியின் 6-வது பதிப்பின்போது அந்நிறுவனம் இந்த விண்வெளி ஆடையை காட்சிப்படுத்தியது. ஆரஞ்சு நிற முன்வடிவம் கொண்ட இந்த விண்வெளி ஆடையை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதை வடிவமைத்து வந்தது.
  • இஸ்ரோ 2 விண்வெளி ஆடைகளை தயாரித்துள்ளது. இஸ்ரோ மற்றொரு விண்வெளி ஆடையை வடிவமைக்கவிருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு செல்லும் 3 இந்திய வீரர்களுக்காக இஸ்ரோ இதை வடிவமைத்துள்ளது.]
  • பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES ஆனது விண்வெளி மருந்து, விண்வெளி வீரரின் ஆரோக்கியத்தை கண்காணித்தல், உயிர் காக்கும் கருவிகள், கதிரியக்க பாதுகாப்பு, விண்வெளி கழிவுப் பொருட்களில் இருந்து பாதுகாத்தல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் போன்ற துறைகளில் தனது அனுபவத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்