புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது 2020-21 மற்றும் 2021-22 ஆண்டுகளுக்கான விநியோகம் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகளை (SUT) வெளியிட்டது.
SUT ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தி வருமானம் மற்றும் செலவின அணுகுமுறைகளை ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பில் ஒருங்கிணைக்கிறது என்பதோடு இது மதிப்பீடுகளின் நிலைத் தன்மையையும் மேம்படுத்துகிறது.
இந்த அட்டவணைகள் 2024 ஆம் ஆண்டு தேசியக் கணக்குப் புள்ளிவிவரங்கள் மற்றும் வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பு போன்ற கணக்கெடுப்புகளின் தரவுகளின் அடிப்படையில் 140 தயாரிப்புகள் மற்றும் 66 தொழில்களை உள்ளடக்கியது.
வாங்குபவர்களின் விலையில் சரக்குகள் மற்றும் சேவைகளின் மொத்த விநியோகம் 2020-21 ஆம் ஆண்டில் 407.52 லட்சம் கோடி ரூபாயாகவும், 2021-22 ஆம் ஆண்டில் 523.08 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
இரண்டு ஆண்டுகளிலும் சேவைத் துறையானது, விநியோகத்தில் சுமார் 55 சதவீதப் பங்களிப்பை அளித்தன, அதே நேரத்தில் உற்பத்திப் பொருட்கள் 30 முதல் 33 சதவீதப் பங்களிப்பை அளித்தன.
மிக உயர் மதிப்புக் கூட்டல் தொழில்கள் குடியிருப்புகள், மீன்பிடித்தல், மீன்வளர்ப்பு, வனவியல், வேளாண்மை மற்றும் கல்வி ஆகியவற்றின் உரிமத்தினை உள்ளடக்கியது ஆகும்.
இரண்டு ஆண்டுகளிலும் கட்டுமானம் 13 சதவீதத்திற்கும் அதிகமான இடைநிலை நுகர்வில் மிகப்பெரியப் பங்கைக் கொண்டிருந்தது.
சரக்குகள், இடைநிலை நுகர்வில் சுமார் 70 சதவீதத்தையும், தனியார் இறுதி நுகர்வு செலவினத்தில் 59 முதல் 62 சதவீதத்தையும் கொண்டிருந்தன.