மக்களவையானது விமானச் சட்டம், 1934 என்ற ஒரு சட்டத்தைத் திருத்தக் கோரும் விமான (திருத்த) மசோதா, 2020 என்ற மசோதா ஒன்றை நிறைவேற்றி உள்ளது.
இந்தச் சட்டமானது உள்நாட்டு விமானங்களின் உற்பத்தி உரிமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதையும் விமான நிலையங்களுக்கு அனுமதி வழங்குவதை ஒழுங்குபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மசோதாவானது பின்வரும் ஒழுங்குமுறை நிறுவனங்களுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளிக்கவுள்ளது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் பொது இயக்குநரகம் (DGCA - Directorate General of Civil Aviation)
சிவில் விமானப் பாதுகாப்பு முகமை (BCAS - Bureau of Civil Aviation Security)
விமான விபத்துகள் விசாரணை முகமை (AAIB - Aircraft Accident Investigation Bureau)
DGCA ஆனது இந்த மசோதாவின் கீழ் விமானப் போக்குவரத்து தொடர்பாக மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளை மேற்கொள்ளும்.
BCAS ஆனது உள்நாட்டு விமானப் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை மேற்பார்வை நடவடிக்கைகளைமேற்கொள்கின்றது.
AAIB ஆனது விமான விபத்துகள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் குறித்து விசாரணை மேற்கொள்கின்றது.
இந்த ஒழுங்குமுறை ஆணையங்களுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரமானது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பினால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது படி இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் தரவரிசையை மேம்படுத்த இருக்கின்றது.
இந்தச் சட்டமானது மத்திய அரசின் கடற்படை, இராணுவம், விமானப் படையைச் சேர்ந்த விமானங்களுக்கு விலக்கு அளித்துள்ளது.