விமானப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் - நவம்பர் 25/29
December 1 , 2024 158 days 176 0
விமானத்தின் அனைத்து அம்சங்களிலும் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தொழிற்துறையின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் பொது விமானப் போக்குவரத்து ஆனது, அலகாபாத் மற்றும் நைனிஆகியவற்றுக்கு இடையே முதல் வணிக ரீதியிலான விமானச் சேவையுடன் 1911 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
1932 ஆம் ஆண்டில் டாடா ஏர்லைன்ஸ் சேவை தொடங்கப்பட்டது என்பது இந்தியாவில் திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
இந்தியாவானது 1947 ஆம் ஆண்டில் சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பில் (ICAO) இணைந்தது.
இன்று, இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாகத் திகழ்கிறது.