TNPSC Thervupettagam

விமான பாதுகாப்பு மேற்பார்வை மதிப்பெண்

October 1 , 2018 2443 days 718 0
  • சமீபத்தில் சர்வதேச உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பால் விமானப் பாதுகாப்பு மேற்பார்வை மதிப்பெண் ஆனது (ICAO - International Civil Aviation Organisation) வெளியிடப்பட்டது.
  • இது பாதுகாப்பு மேற்பார்வை அமைப்பின் முக்கிய அம்சங்களை திறம்படவும் மற்றும் உறுதியான முறையிலும் செயல்படுத்திய நாடுகளை அடையாளம் காண முயல்கிறது.
  • இந்தியாவின் தரவரிசையானது முன்னிருந்த 66% லிருந்து 57% க்கு குறைந்துள்ளது. மேலும் குறைந்தபட்ச இலக்கிற்கு கீழுள்ள 15 நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது.
  • இந்தியாவின் மதிப்பானது ஆசிய பிராந்தியத்தில் மியான்மர், வங்காள தேசம், மாலத்தீவு, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, நேபாளம் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளை விட குறைவாக உள்ளது.
  • இந்தியாவின் மதிப்பெண்ணுக்கு கீழ் சிறிய மற்றும் மிகச்சிறிய நாடுகளான பப்புவா, நியூகினியா, தைமூர்-லெஸ்தே, வனுவாட்டு, சமோவா ஆகியவை மட்டுமே உள்ளன.
  • இதுபோன்ற தரமதிப்பு குறைவின் காரணமாக இந்திய விமானங்களை அமெரிக்காவிற்கு இணைக்கவோ அல்லது அமெரிக்க விமானங்களுடன் கூட்டணியையோ அமைக்க முடியாது.
  • இது இந்தியப் போக்குவரத்து விமானங்களின் உலகளாவிய விரிவாக்க திட்டத்தை முடக்கக் கூடியது ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்