நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் 2026-இன் வெற்றியாளர்கள் பல்வேறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி சேர்ந்த ஜானிக் சின்னர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) தோற்கடித்து ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றார். இது அவரின் இரண்டாவது தொடர்ச்சியான விம்பிள்டன் பட்டமாகும்.
செக்கியாவைச் சேர்ந்த லிண்டா நோஸ்கோவா கரோலினா முசோவாவை (செக்கியா) தோற்கடித்து மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றதன் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஹாரி ஹெலியோவாரா (பின்லாந்து) மற்றும் ஹென்றி பேட்டன் (இங்கிலாந்து) ஜோடி ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்றது.
குவோ ஹன்யு (சீனா) மற்றும் கிறிஸ்டினா மிலேடனோவிச் (பிரான்ஸ்) ஜோடி மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றது.
மார்செலோ அரேவலோ (எல் சால்வடார்) மற்றும் ஜெலினா ஆஸ்டபென்கோ (லாட்வியா) ஜோடி கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றது.