விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் மற்றும் ஜப்பான்
June 27 , 2021 1603 days 569 0
ஜப்பான் நாடானது சமீபத்தில், விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்திற்கு (Regional Comprehensive Economic Partnership – RCEP) அதன் ஒப்புதலை அளித்துள்ளது.
இது ஆஸ்திரேலியா, சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு (ASEAN - Association of Southeast Asian Nations) ஆகியவற்றிற்கிடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள மூன்றாவது நாடு ஜப்பான் ஆகும்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் சீனா மற்றும்சிங்கப்பூர் ஆகியவை அதற்கான ஒப்புதலை வழங்கும் செயல்முறைகளையும் நிறைவு செய்துள்ளன.
RCEP ஒப்பந்த அமைப்பில் இணைவதால் இது சீனா மற்றும் தென் கொரியா ஆகியவற்றுடனான ஜப்பானின் முதலாவது வர்த்தக ஒப்பந்தமாக உள்ளது.