இந்தியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் மஸ்கட்டில் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் (CEPA) கையெழுத்திட்டன.
இந்தியாவின் ஏற்றுமதியில் 99.38 சதவீதத்தினை உள்ளடக்கிய 98.08% கட்டண பிரிவுகளுக்கு ஓமன் வரியில்லா அணுகலை வழங்கும்.
இந்தியா ஓமனில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியில் 94.81 சதவீதத்தினை உள்ளடக்கிய அதன் கட்டணப் பிரிவுகளில் 77.79% பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்கும்.
CEPA ஆனது திறமையான நிபுணர்களுக்கு எளிதான போக்குவரத்தினை அனுமதிக்கிறது (முறை-4) மற்றும் ஒப்பந்த சேவை வழங்குநர்களுக்கான தங்கும் வசதியை 90 நாட்களில் இருந்து 2 ஆண்டுகளாக நீட்டிக்கிறது.
2024–25 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம்: இந்தியா பெரும்பாலும் எரிசக்தி மற்றும் உரப் பொருட்களில் 4.06 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி மற்றும் 6.5 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்தது.