தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் (NSS) 80வது சுற்றின் கீழான கல்வி குறித்த விரிவான மாதிரிக் கணக்கெடுப்பு (CMS) தற்போது சேர்ந்துள்ள மாணவர்களுக்கான பள்ளிக் கல்விக்கான வீட்டுச் செலவினங்களை ஆய்வு செய்தது.
மொத்த மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகள் 55.9 சதவீதமாகும் என்பதோடு இதில் கிராமப்புறங்களில் 66.0 சதவீதமும் நகர்ப்புறங்களில் 30.1 சதவீதமும் உள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களில் 26.7 சதவீதம் பேர் மட்டுமே பாடக் கட்டணம் செலுத்தினர் என்ற நிலையில் அரசு சாரா பள்ளிகளில் இது 95.7 சதவீதமாக உள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள தனியார் உதவி பெறாத பள்ளிகளில், 98.0 சதவீத மாணவர்கள் பாடக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு வீட்டுச் செலவு 2,863 ரூபாயாகவும், அரசு சாரா பள்ளிகளில் 25,002 ரூபாயாகவும் இருந்தது.
சராசரியாக ஒரு மாணவருக்கு 7,111 ரூபாயாக உள்ள பாடக் கட்டணம் ஆனது குடும்பங்களுக்கு அதிகபட்ச செலவாக உள்ளது என்பதோடு அதைத் தொடர்ந்து பாடப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களுக்கு ஆகும் செலவினம் 2,002 ரூபாயாகவும் இருந்தது.
நகர்ப்புற மாணவர்கள் பாடக் கட்டணமாக சராசரியாக 15,143 ரூபாய் செலவிட்டனர், அதே நேரத்தில் கிராமப்புற மாணவர்கள் 3,979 ரூபாய் செலவிட்டனர்.
நகர்ப்புறங்களில் 30.7 சதவீதமும் கிராமப்புறங்களில் 25.5 சதவீதமும் என சுமார் 27.0 சதவீத மாணவர்கள் தனியார் பயிற்சியை மேற்கொண்டனர்.
பயிற்சிக்கு ஆகும் சராசரி குடும்பச் செலவு நகர்ப்புறங்களில் 3,988 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 1,793 ரூபாயாகவும் இருந்தது.
உயர்நிலைப் பள்ளியில், பயிற்சிச் செலவுகள் நகர்ப்புறங்களில் 9,950 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 4,548 ரூபாயாகவும் இருந்தன.
இந்தியா முழுவதும் உள்ள 95.0 சதவீத மாணவர்களுக்கு கல்வி நிதியின் முக்கிய ஆதாரமாக குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர்.
1.2 சதவீத மாணவர்கள் மட்டுமே அரசாங்க உதவித் தொகையை தங்கள் முதன்மை நிதி ஆதாரமாகச் சார்ந்துள்ளதாக கூறினர்.