ரஷ்யா சமீபத்தில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதியினை உற்பத்தி செய்தது.
அந்த தடுப்பூசியின் பெயர் கார்னிவாக்–கோவ் என்பதாகும்.
மனிதர்களுக்கும் வைரஸ்களுக்குமிடையே வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பானது சமீபத்தில் உறுதிபடுத்தியது.
கார்னிவாக்-கோவ் தடுப்பூசியானது ரஷ்யாவிலுள்ள கால்நடை மற்றும் தாவர நலக் கண்காணிப்புக்கான (Veterinary and Phytosanitary Surveillance) ஒரு கூட்டாட்சி சேவை அமைப்பான ரோசல்கோஸ்னாட்ஸர் (Rosselkhoznadzor) என்ற அமைப்பால் உருவாக்கப் பட்டது.